ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு ஏற்படும்: டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் எச்சரிக்கை
அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கூறியதாவது:-
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கைவிடப் போவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்.
வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது. இதில் டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளாக சி.ஐ.ஏ. இயக்குனராக பொறுப்பு வகித்து வரும் ஜான் பிரன்னன் வரும் ஜனவரி மாதம் பதவி விலக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply