இலங்கையின் வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும்

ranilஇலங்கையின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.த எக்கனொமிஸ்ட் சஞ்சிகை ஹொங்கொங்கில் ஏற்பாடு செய்திருந்த 2017ம் ஆண்டில் உலகம் என்ற விசேட கருத்தரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த மாநாட்டில் உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள், கல்விமான்கள், தொழில் முயற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் :

இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்தியத்தின் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அன்றி முன்மாதிரியாக திகழும்.

இந்துமா சமுத்திரத்தின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இலங்கை போன்ற சிறியதொரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனவே பிராந்தியத்தின் சகல நாடுகளுடனும் ஒத்துழைப்பையும், நட்புறவையும் வளர்க்க இலங்கை ஆர்வம் கொண்டுள்ளதெனக் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply