நோர்வேயில் உள்ள இலங்கை தூதரகம் மீது தாக்குதல்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஞாயிற்றுக் கிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை மதியம் தூதுரகத்திற்குள் ஒரு சில நபர்கள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும், எனினும் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லை என்பதால் நபர்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறினார் நோர்வேக்கான இலங்கை தூதர் அசலா வீர கோன்.

மேலும் இந்த தாக்குதல்களை சமீபத்தில் இங்கே ஆர்பாட்டம் நடத்துபவர்கள் தான் செய்து இருக்க வேண்டும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும், இருந்த போதிலும் யார் மீதும் தாங்கள் குறிப்பாக புகார் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். எனினும் இது தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

கொழும்பில் இருக்கும் நோர்வே தூதரகத்துக்கு தாங்கள் முழு பாதுகாப்பு அளிக்கும் நிலையில், இங்கிருக்கும் தூதரகத்துக்கு சற்றே கூடுதலான பாதுகாப்பை நோர்வே வழங்கவேண்டும் என்று கருதுவதாகவும், தூதரகம் தாக்குதலுக்குள்ளாகியிருந்தாலும் திங்கட் கிழமை வழக்கம் போல செயற்படும் என்றும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply