ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் விளக்கமறியலில்
பேஸ்புக் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட 26 வயது இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை சந்தேகநபருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாக, இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர். இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 15ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply