கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலித் தலைமைத்துவம் பணிப்பு
புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் பொது மக்களை கண்ட இடத்தில் சுடுமாறு புலிகளின் தலைமைத்துவம் தங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்க புலிகளின் தலைமைத்துவம் இந்த உத்தரவை விடுத்துள்ளமைக்கான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும், புலனாய்வு துறையினருக்கும் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
தப்பி வரும் பொது மக்களின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் பாதுகாப்பு வலய எல்லையில் ஆயுதம் தாங்கிய புலிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் கடுமையான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு மத்தியிலும் நேற்றைய தினம் மேலும் 270 பொது மக்கள் அம்பலவன்பொக்கணை பிரதேசத்தை நோக்கி வருகை தந்துள்ளனர்.
இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ள இவர்களுள் 86 ஆண்களும், 77 பெண்கள், 48 சிறுவர்கள் மற்றும் 59 சிறுமிகளும் அடங்குவர். இவ்வாறு தப்பி வரும் போது புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடை ந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
67,280 பொது மக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகை தந்துள்ளதாகவும், அவர்களுக்குத் தேவை யான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply