விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீரர் ஜான் கிலன் மரணம்
அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இவர் கடந்த 1962-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். இவர் விண்வெளிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல் வீரர் ஆவார்.
விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய அவர் 1974-ம் ஆண்டில் அமெரிக்க செனட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விண்வெளி சென்று திரும்பிய 36 ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம்ஆண்டு மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வயது 77. இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற மிக வயதான வீரர் என்ற பெருமை பெற்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply