டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு ரஷியா ரகசியமாக உதவியது: அமெரிக்க உளவுத்துறை புகார்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதற்கிடையே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு ரஷியா ரகசியமாக உதவியுள்ளது என அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. புகார் கூறியுள்ளது. இத்தகவல் அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது ரஷிய அரசு ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி மற்றும் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பிரசாரங்களின் ஆயிரக் கணக்கான இ-மெயில்களை திருடி அதை விக்கி லீக்குக்கு வழங்கி வெளியிட்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிபெற வேண்டும், ஹிலாரி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷியா இவ்வாறு செய்துள்ளது என்றும் கூறியுள்ளது.
ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவரது ஆலோசகர் குழுவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க தேர்தலில் வெளி நாட்டின் தலையீடு எதுவும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் பிரசாரம் குறித்த இ-மெயில்கள் திருடப்பட்டு விக்கி லீக்குக்கு வழங்கப்பட்டு வந்தது தினமும் நடந்தது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் ரஷியா மீது ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியது. அப்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை ரஷியா மறுத்துவிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply