பாதுகாப்பு மரபுகளை உதறிவிட்டு தாயாரை பார்க்க சென்ற மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அதன் முடிவில் அவர் கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதற்காக காந்திநகரில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் (கமலம்) சென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவர் பாதுகாப்பு மரபுகளை உதறிவிட்டு, தன் தாயார் ஹீரா பென் அம்மையாரை காண்பதற்காக ரேசானில் உள்ள இல்லத்துக்கு சென்றார்.

 

அந்த இல்லத்தில் ஹீரா பென், தனது மற்றொரு மகனுடன் வசித்து வருகிறார்.அங்கு அவரை பிரதமர் மோடி பார்த்து பேசி மகிழ்ந்தார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply