பாகிஸ்தானை உடைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது: நிசார் அலி கான்
தீவிரவாதத்தை ஒழிக்காவிட்டால் பாகிஸ்தான் 10 நாடுகளாக உடையும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அந்நாட்டு உள்துறை மந்திரி நிசார் அலி கான் பாகிஸ்தானை உடைக்கும் இந்தியாவின் கனவு போலியானது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானை உடைக்க வேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கனவு போலியான தர்க்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையில் பைத்தியக்காரனின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ராஜ்நாத் சிங்கின் கருத்து ஆழமற்ற கூற்றாகும்.
ஆளும் பா.ஜ.க. அரசு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளில் செயல்படுகின்றது. இந்தியா, மற்ற நாடுகளால் அல்ல தன்னுடைய கொள்கையினால் உடைபட்டு கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர்தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவிடம் இருந்து மதத்தின் அடிப்படையில் பிரிந்து சென்ற பிறகு பாகிஸ்தான் ஒருங்கிணைந்த நாடாக நீடித்திருக்க முடியவில்லை. 1971-ம் ஆண்டு இரண்டு நாடுகளாக பிரிந்தது. தொடர்ந்து இதே வழியில் சென்றால் பாகிஸ்தான் 10 நாடுகளாக உடையும். ஆனால் அந்த பிரிவினையில் இந்தியாவின் பங்கு எதுவும் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply