ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள ‘உண்மையான சதிகாரர்கள்’ யார்?- உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதா? உண்மையான சதிகாரர்கள் யார்? என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப, சிபிஐ இதற்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு புதனன்று வந்த போது, சென்னை தடா கோர்ட்டின் உத்தரவு இருந்தும் ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய அளவில் சதி நிகழ்ந்துள்ளதா என்பதை ஏன் விசாரிக்கவில்லை என்று சிபிஐ-க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஜி.பேரறிவாளன் தடா கோர்ட்டில் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது ராஜீவ் கொலை வழக்கில் விடுபட்ட பகுதிகளை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “வேறென்ன விசாரணை தேவை?” என்றார்.

இதற்கு பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், மேலும் விசாரணைக்கான தேவையிருக்கிறது என்பதை வலியுறுத்தி, “சிபிஐ-யின் அணுகுமுறை ‘உருவாக்கப்பட்ட பரபரப்பு கொள்கை’ சார்ந்ததாகவே இருந்தது. அதாவது மரணம் நிகழ்ந்துள்ளது, இதனையடுத்து உருவான பரபரப்பு சார்ந்தவற்றை சிபிஐ விசாரணை செய்ததே தவிர பின்னணியில் உள்ள பெரிய சதியைப் பற்றி விசாரிக்கவில்லை. இந்தக் கேள்விதான் தற்போது விசாரணையைக் கோருகிறது” என்றார்.

இதற்கு நீதிபதி கோகய் குறுக்கிட்டு, “எனவே பரபரப்பு ஓய்ந்தது, விசாரனையும் ஓய்ந்தது, ஆனாலும் இதில் வேறொன்று இருக்கிறது என்று கூறுகிறீர்களா?” என்றார்.

“ஆம்! தடா நீதிமன்றம் இதில் கூடுதலான சதி உள்ளது, எனவே உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது” என்றார்.

இதனையடுத்து சிபிஐ பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தியது.

முன்னதாக பேரறிவாளன் கீழ் நீதிமன்றங்களில் சிபிஐ (சிறப்பு விசாரணைக் குழு) மற்றும் பல்துறை கண்காணிப்பு கழகம் ஆகியவை இந்த வழக்கு குறித்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கக் கோரியிருந்தார்.

பெரிய சதி உள்ளது என்ற தனது பார்வைக்கு ஆதரவாக பேரறிவாளன் ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையைக் குறிப்பிட்டார். அதில்தான் இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்ய வேண்டிய தேவையிருப்பதற்கான அடிப்படைகள் உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் கொலை பின்னணியில் உண்மையான சதிகாரர்கள் யார் என்ற பேரறிவாளன் கேள்விக்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply