ஐ.நா.வின் அவசரகால மீட்பு நிதிக்கு ரூ.3.4 கோடி வழங்குகிறது இந்தியா

2016-17-ம் ஆண்டுக்கான ஐ.நா.வின் அவசரகால மீட்பு நிதிக்கு, இந்தியாவின் பங்களிப் பாக 5 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ.3.4 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உயர் மட்ட உறுதியேற்பு மாநாடு நடை பெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்திய தூதுக் குழுவின் உறுப்பினர் அஞ்சானி குமார் பேசும்போது,

‘‘2016-17-ம் ஆண்டுக்கான ஐ.நா.வின் மத்திய அவசரகால மீட்பு நடவடிக்கைகள் நிதிக்கு இந்தியா தனது பங்களிப்பாக 5 லட்சம் அமெரிக்க டாலர் வழங்குகிறது. இந்நிதிக்கு இதுவரையிலான இந்தியாவின் ஒட்டுமொத்த பங்களிப்பு 60 லட்சம் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியா, உள்நாட்டு அளவில் நிதி ஆதாரங்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும், தடைகளையும் எதிர்கொண் டாலும், நமது நட்பு நாடுகள் மற்றும் கூட்டு அமைப்புகளின் வேண்டுகோளையும், தேவை களையும் பூர்த்தி செய்யும் வகையில், தேசிய சூழலுக்கும், திறனுக்கும் உட்பட்டு நிதி பங்களிப்பை வழங்கி வருகிறது.

மேலும் சுனாமி, பூகம்பங்கள், சூறாவளிப் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாளம், சோமாலியா, இலங்கை, ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறது.

உலகளவில் மனிதாபிமான உதவிகளுக்கான அவசரத் தேவையை எதிர்நோக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அதற்கேற்ப அவசரகால மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேம்படவில்லை.

இந்த குறைபாடுகளைப் போக்கும் வகையில், சர்வதேச அளவிலான அவசரகால நட வடிக்கைகளை விரிவுபடுத்தவும், துரிதப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்’’ என்றார்.

ஐ.நா.வின் மத்திய அவசரகால மீட்பு நடவடிக்கை நிதிக்கு, அரசுகள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதற்கான வருடாந்திர இலக்கு 45 கோடி அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்படும் சீரழிவுகள், நீடித்த பிரச்சினை கள் போன்றவற்றுக்கான அவசர காலப் பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஆண்டு தோறும் 50 வெவ்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான உதவிக்காக சுமார் 45 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கீடு செய் யப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply