போலந்தில் ஊடக சுதந்திரத்திற்கு தடை: 72 மணி நேரமாக பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

போலந்து பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை செய்திகளாக பதிவு செய்ய அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை படமாக்க அரசாங்கம் தேர்வு செய்யும் குறைந்த அளவு செய்தியாளர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஊடகத்தின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒருகட்டமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் முக்கிய வீதிகளை முடக்கியும், பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டும் நடைபெற்றுவரும் பொதுமக்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்கட்சியனர் தொடர்ந்து அவையின் நடவடிக்கைளை இயங்க விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply