சீனா: கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தீவிரவாதிகள் கத்திக்குத்து தாக்குதல் – 5 பேர் பலி
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள க்சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியை இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்ட பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று இவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களின் போராட்டத்தை அரசுக்கு எதிரான தீவிரவாதம் என சீனாவை ஆளும் கம்யூனிஸ் கட்சி அறிவித்துள்ளது.
ரெயில் நிலையம், பிரபல சந்தைப்பகுதி போன்ற இடங்களில் கும்பலாக நுழையும் உய்குர் இன தீவிரவாதிகள், கண்ணில் படுபவர்களை எல்லாம், கோடரி, வெட்டரிவாள் போன்றவற்றால் தாக்கி, துடிதுடிக்க கொன்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கராகஸ் பகுதியில் இருக்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஒரு காரில் வந்த உய்குர் தீவிரவாதிகள் அந்த கட்டிடத்தின்மீது வெடிகுண்டுகளை வீசினர். உள்ளே இருந்தவர்களை எல்லாம் கூர்மையான ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான அங்கு விரைந்துவந்த பாதுகாப்பு படையினர், தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply