ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள்: புதின்
அமெரிக்காவில் உள்ள 35 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஷியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதற்கு அடுத்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பது வரை, தான் பொறுத்திருக்கப் போவதாக புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரக அதிகாரிகளின் குழந்தைகளை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கும் அளவிற்கு அவரது பரிந்துரைகள் இருந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி ரஷியா முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அரசாங்கம் வியாழக்கிழமை, வெளியேற்றியது.
ரஷிய அரசு இணையத் திருட்டில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply