பொதுத் தேர்தலா? மாகாணசபைத் தேர்தலா ? அடுத்தவாரம் தீர்மானம்

பொதுத் தேர்தலையா அல்லது மகாக்ணசபைத் தேர்தல்களையா முதலில் நடத்துவது என்பது பற்றி அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்தவாரம் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்வார் எனத் தெரியவருகிறது.

கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி அடுத்த தேர்தல் தொடர்பாக ஆராயும் எனவும், இந்த மத்திய குழுக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவது எனத் தீர்மானித்தால் எந்தெந்த மாகாணசபைகளைக் கலைப்பது என ஜனாதிபதி கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்பார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டை தேர்தல்களின் ஆண்டு என அரசாங்கம் ஏற்கனவே பிரகடனப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply