தொலைதூர தாக்குதல் திட்டத்தில் வெற்றிபெறுமா வடகொரியா?

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.உலக நாடுகளின் எதிர்ப்புகளை தாண்டியும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

வடகொரியா 2006ஆம் ஆண்டு முதலாக தொடர்ச்சியான அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகின்றது. அவற்றோடு அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையையும் மேற்கொண்டது . இந்நிலையில் அந்நாட்டின் அணுகுண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் வடகொரியா எதையும் பொருட்படுத்துவதில்லை. அந்நாட்டின் பல்வேறு சோதனைகள் தோல்வியிலும் முடிந்துள்ளது.

இந்நிலையில் கிம் ஜாங் உன் தனது புத்தாண்டு செய்தியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தடை செய்யப்பட்ட தொலைதூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் தயாரிப்புகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

2011-ம் ஆண்டு தந்தை உயிரிழந்த நிலையில் கிம் ஜாங் உன் ஜனாதிபதியானார். அவர் தனக்கு எதிராக செயற்படுபவர்களை கொன்று குவித்தும் வருகிறார். அத்தோடு எதிர்வரும் காலங்களில் அவர் அதிகளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply