தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார்? என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கருத்து.

ஆனால், அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்களும், அ.தி.மு.க. அனுதாபிகளும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு தீபா தனது நிலைப்பாட்டை உறுதியாக கூறவில்லை. இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அடுத்தகட்டமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள தீபா வீட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தினமும் படையெடுக்கிறார்கள்.

வீட்டின் முன்பு குவியும் தொண்டர்கள் ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று கோ‌ஷம் எழுப்புகிறார்கள். கட்சி பொறுப்புக்கு வரும்படி தீபாவை வலியுறுத்தி வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். பெண்களும் பெருமளவில் வருகிறார்கள்.

இவ்வாறு குவியும் தொண்டர்கள் இரவு வரை நிற்கிறார்கள். தொண்டர்கள் குவிந்ததும் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களை பார்த்து கும்பிட்டு பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார்.

ஆனால் தொண்டர்கள் அவரிடம் கட்சிக்கு வாருங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்களிடம் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் அவர்களது கருத்தையும் பதிவு செய்யும்படி கூறுகிறார். நேற்று ஒரே நாளில் 3 பதிவேடுகள் நிரம்பியது.

அங்கு திரளும் தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் தீபாவை வற்புறுத்துகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply