நோர்வையை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து இலங்கை அரசாங்கம் நீக்கியது

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை இலங்கைக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.

1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை

2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு இலங்கையினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply