தலைப்பாகை, தாடி, ஹிஜாப்புக்கு அனுமதி அளித்தது அமெரிக்க ராணுவம்
அமெரிக்க ராணுவத்தில் ஏராளமான சீக்கிய, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மத அடையாளங்களை சுதந்திரமாக பின்பற்ற அந்நாட்டு ராணுவம் அனுமதியளித்துள்ளது.இதற்கு முன்னதாக செயலர் நிலையிலான அதிகாரிகளுக்கு மட்டும் மத அடையாளங்களை பின்பற்ற அனுமதி அளித்த நிலையில், தற்போது கீழ் நிலை வீரர்களுக்கும் அனுமதியளித்து அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி பிரிகேட் நிலை சீக்கிய வீரர்களும் இனி தங்கள் அடையாளமான தலைப்பாகை வைத்துக்கொள்ளலாம், நீண்ட தாடி வளர்த்துக் கொள்ளலாம். மேலும் முஸ்லிம் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து கொள்ளலாம்.
அமெரிக்க சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் அவ்வீரர்கள் மேலும் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள் எனவும் அந்நாட்டு ராணுவ செயலாளர் கூறியுள்ளார்.
இதேபோல் சிறுபான்மை இன போலீசார் தங்கள் மத அடையாளங்களை பின்பற்ற தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என நியூயார்க் நகர போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அமெரிக்காவில் வசிக்கும் சீக்கிய சமூகத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply