மோதல் இடைநிறுத்தத்தை ஐ. நா அதிகாரி வரவேற்றுள்ளார்
புதுவருட தினத்தை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரு நாள் மோதல் இடை நிறுத்தத்தை, ஒரு முதற்கட்ட நடவடிக்கை என்று வரவேற்றுள்ள மனித நேயப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பொதுச் செயலர் ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள், அதனை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இது ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கின்ற போதிலும், அங்கு அகப்பட்டுள்ள மக்களின் அவதியைக் குறைக்கவும், அங்கு உதவிப்பொருட்கள் செல்வதற்கான வழி வகைகளை செய்யவும் இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் இரு தரப்பும் தமது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ள அவர், பொதுமக்கள் மோதல் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக இந்தக் காலகட்டத்தில் வெளியேற விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply