அடிக்கல் நாட்டப்பட்டது வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கா? பிரதமரின் விளக்கம்

வொக்ஸ்வெகன் நிறுவனத்தின் முதலீடு இன்றி வொக்ஸ்வெகன் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு 2016ம் ஆண்டு ஆரம்ப பகுதியிலேயே தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.2015ம் ஆண்டு காலப்பகுதியில் வொக்ஸ்வெகன் தொழிற்சாலையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச ரீதியாக அந்த தொழிற்சாலை வீழ்ச்சியடைந்து காணப்பட்ட காரணத்தால் இறுதியில் வெஸ்டர்ன் ஒட்டோமொபைள் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்ததாக பிரதமர் கூறினார்.

அதன்படி இங்கு வொக்ஸ்வெகன் கார்கள் மற்றும் வேறு நிறுவனங்களின் கார்களும் தயாரிக்க முடிவதாகவும், இவ்வாறு தொழிற்சாலைகள் ஆரம்பித்து தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

வொக்ஸ்வெகன் நிறுவனத்தின் பெயரில் இங்கு தொழிற்சாலை ஆரம்பிக்கப்படவில்லை என்பதை வொக்ஸ்வெகன் நிறுவனத்திடம் கேட்டு தகவல் வௌியிடுவதற்கு அக்கறை செலுத்தும் தரப்பினர், தன்னிடமோ அல்லது அமைச்சரிடமோ கேட்டிருந்தால் அவ்வளவு சிரமமின்றி சரியான தகவல்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் தன் மீதுள்ள தனிப்பட்ட கோபம் காரணமாக அடுத்தவர்களின் மனதை திரிவுபடுத்த வேண்டாம் என்றும், களுகங்கை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வில் உரையாற்றும் போது பிரதமர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply