அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்து எம்.பி.க்கள் அதிகரிப்பு
அமெரிக்காவின் 115-வது பாராளுமன்றம் நேற்று கூடியது. அதில் எப்போதும் இல்லாத அளவில் இந்து, யூதர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.தற்போதைய பாராளுமன்றத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 23 பேர் எம்.பிக்களாக உள்ளனர். அவர்களில் 3 பேர் இந்தியாவை சேர்ந்த இந்துக்கள் அவர்களது பெயர் துல்சிகவார்டு, ராஜா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ரோகன்னா இவர்களுக்கு அடுத்தபடியாக 30 யூதர் இன எம்.பிக்கள் உள்ளனர். புத்தமதத்தை சேர்ந்தவர்களும் 3 பேர் உள்ளனர்.
அதே நேரத்தில் 91 சதவீதம் கிறிஸ்தவ எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இதே போன்ற நிலை 87-வது பாராளுமன்றத்தில் இருந்தது. அப்போது 95 சதவீதம் எம்.பிக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ள இந்து, முஸ்லிம் மற்றும் புத்த மத எம்.பிக்கள் அனைவரும் ஐனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். மேலும் அமெரிக்கவாழ் இந்திய எம்.பிக்களும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் என ‘பியூ’ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply