32 இந்திய மீனவர்கள் விடுதலை
கடந்த வருடம் இறுதியில் நெடுந்தீவு கடல்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்துறை நீதிமன்றினால், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் வௌ;வேறு தினங்களில் 6 விசைப்படகுடன் 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கள,; சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களது படகுகள் மற்றும் சான்றுபொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply