பாகிஸ்தானில் 10 ராணுவ வீரர்களை விடுவிப்பதற்காக 3 தலீபான் தீவிரவாதிகள் விடுதலை

பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தலீபான் தீவிரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பழங்குடி இன தலைவர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தலீபான் அமைப்பின் தலைவர் மசூத்தின் வலதுகரமாக திகழும் மவுல்வி ரபீயுதீனை விடுவிக்க அரசாங்கம் சம்மதித்தது. இதற்கு பதிலாக 10 ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு தீவிரவாதிகள் சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து மவுல்வி ரபீயுதீன் உள்பட 3 தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் தங்கள் வசம் இருந்த 10 ராணுவ வீரர்களை விடுவித்தனர்.

ரபீயுதீனும் மற்ற 2 பேரும் கடந்த ஜுலை மாதம் 9-ந் தேதி ஹங்கு என்ற இடத்தில் கைதானார்கள். ரபீயுதீன் வைக்கப்பட்டு இருந்த போலீஸ் நிலையத்தை 300 தலீபான் தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். அவர்களை அடித்து விரட்டுவதற்காக கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதை அறிந்த தீவிரவாதிகள், அங்கு இருந்த 15 ராணுவ வீரர்களை பணய கைதிகளாக சிறைப்பிடித்தனர். அவர்களுடன் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். ரபீயுதீனை விடுவிப்பதற்காக அப்பாவி பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் தலீபான்கள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர்களில் 3பேர் கொல்லப்பட்டனர். அதோடு 30 போலீஸ்காரர்களையும் கடத்திச் சென்றனர். அதோடு ரபீயுதீனை விடுவிக்க ஒரு வாரம் கெடு விதித்தனர். அதற்குள் விடுவிக்கா விட்டால் மேலும் 2 பேரை சுட்டுக் கொல்வோம் என்றும் மிரட்டினார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply