சந்தர்ப்பவாதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – ஜனாதிபதி
தேசிய நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் குறுகிய அரசியல் தேவைகளுக்காக செயற்படும் சந்தர்ப்பவாதிகளுக்காக அல்ல. எதிர்கால தலைமுறைக்கானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பகைமை, குரோதங்கள் மற்றும் தனக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்களுக்கு ஏற்ப அதிகாரத்தை இலக்குவைத்து செயற்படும் சிலர் இன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களை குழுப்புகின்றனர்.
தேசிய தேவையை விளங்கிக்கொள்ளாத வகையில் செயற்படுகின்றனர். குறுகிய சுய நல அரசியல் நோக்கங்களுக்காகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
சிறந்த விடயங்களை செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ள அனைவரும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும். நாட்டுக்குத் தேவையான தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களை சீரழிப்பதற்காக சில சந்தர்ப்பவாதிகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் உறுதியான வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply