லசந்­த விக்கி­ர­ம­துங்­கவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு

‘சண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை வழக்கு நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் நேற்று இடம்­பெற்­ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply