மோடிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.இந்நிலையில், பராக் ஒபாமா நேற்று பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தனது பதவிக்காலத்தில் இந்திய – அமெரிக்கா உறவுக்கு சிறந்த ஒத்துழைப்பு அளித்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுக்கு உறுதியான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடியும் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 2015-ம் ஆண்டில் நடந்த இந்தியக் குடியரசுத் தின விழாவில் பங்கேற்றதை ஒபாமா நினைவு கூர்ந்த ஒபாமா வரும் ஆண்டில் நடக்கும் குடியரசுத் தினத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் பதவிக்காலம் முடிந்ததும், ஒபாமா எடுக்கும் அடுத்த கட்ட முயற்சிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே சிவில்-அணு ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி உள்பட பல ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசியில் பேசிய தகவல்களை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014-ம் ஆண்டில் பிரதமராக மோடி வெற்றி பெற்றதும் முதல் வெளிநாட்டு தலைவராக ஒபாமா வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply