ஆந்திராவில் நள்ளிரவில் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் கவிழ்ந்து 32 பயணிகள் உயிரிழப்பு
சத்தீஷ்கர் மாநிலம் ஜகதால்பூரில் இருந்து ஆந்திரா வழியாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்லும் ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11.30 மணிக்கு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குனேரு என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. ரெயில் என்ஜினும் அதனைத்தொடர்ந்து உள்ள 7 பெட்டிகளும் தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தது. இந்த பெட்டிகளில் பயணம் செய்த 27 பயணிகள் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினரும், ரெயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். 4 வேன்களில் மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இதற்கிடையே படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினரின் துக்கத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாகவும் காயம் அடைந்தவர்கள் வேகமாக குணம் அடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விபத்து பற்றிய தகவல்களை அறிய இலவச உதவி எண்களை ரெயில்வே வெளியிட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து விபத்து காரணமாக அந்தப் பாதையில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரெயில்கள் மாற்றுப் பாதையில் விடப்படுகின்றன.
ராயகாடா உதவி எண்கள்: பிஎஸ்என்எல் எண்கள்; 06856-223400, 06856-223500 மொபல் 09439741181, 09439741071. ஏர்டெல் – 07681878777. விசாகப்பட்டணம், ரெயில்வே உதவி எண்கள், 83331, 83332, 83333, 83334. பிஎஸ்என்எல் 08922-221202, 08922-221206.
மாவட்ட கலெக்டர் பூணம் குகா பேசுகையில், ஹீராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் 32 பேர் பலியாகி உள்ளனர், 50 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்று கூறிஉள்ளார். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply