பொறுத்து இருந்து பார்ப்போம் : டிரம்ப் குறித்து கருத்து தெரிவிக்க போப் பிரான்சிஸ் மறுப்பு
அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றார். துணை ஜனாதிபதியாக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்றும் போப் பிரான்சிஸ் என்று கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “டிரம்ப் குறித்து எந்த கருத்தினையும் கூற விரும்பவில்லை. அவர் எப்படி செயல்படுகிறார், தனது கொள்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துகிறார் என்பதை முதலில் பார்க்கலாம்.
நெறிமுறை விழுமியங்களின் வழிகாட்டுதல்களின் படி செயல்பட வேண்டும். ஏழைகள் மற்றும் நாடு கடத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply