மொனறாகலை மாவட்டத்தில் 48 மணிநேரத்துக்குள் 12 பேர் கொலை
மொனறாகலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது 12 கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த மாவட்த்தின் கல்டம்எரா என்ற கிராமத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகள் மூவரைச் சுட்டுக் கொன்றனர்.மேலுமொருவர் காயமடைந்தார். கொல்லப்பட்டவர்களில் இருவர் பெண்களாவர்.
பலத்த காயத்துக்குள்ளான மேலுமொரு மொனறாகலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினமிரவு (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
புத்தல, மஹகொடயாய கிராமத்துக்குள் திடீரெனப் புகுந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலின் தே இவர்கள் கொல்லப்பட்டனர்.வயலில் வேலை செய்து விட்டு தமது இருப்பிடங்களுக்குத் திருப்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.கொல்லப்பட்டவர்;களில் 3 பெண்களும் 3 சிறுவர்களும் அடங்குவர். ஓரு வயோதிப பெண் காயமடைந்தார்.
இந்தத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புத் தெரிவித்தது. தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிசாரும் இராணுவத்தினரும் பாரிய தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply