இலங்கையில் 10 கோடி ரூபா வலம்புரியுடன் 7 பேர் கைது
10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்றதாகத் தெரிவித்து, கல்குடாவில் வைத்து 7 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை அடி நீளமான வலம்புரி சங்கு மட்டக்களப்பு மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை, வாழைச்சேனை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply