சிரியா அரசு – போராளிகள் இடையே 2-ஆம் நாள் பேச்சுவார்த்தை பலன் தருமா?
சிரியா அரசுக்கும், போராளிக் குழுக்களுக்கும் இடையே கஜகஸ்தானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீதொருவர் கடுமையான சாடல்களை பகிர்ந்து கொண்டதால், நேற்றைய பேச்சுவார்த்தை கோபாவேசம் மிகுந்ததாக அமைந்தது.
சிரியா அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசை ஒரு பயங்கரவாத அமைப்பு என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான முகமது அலூஷ் விவரித்துள்ளார்.
அவரது இந்த கடுமையான கருத்தை, ஒரு இழிவான மற்றும் ஆத்திரமூட்டும் விமர்சனம் என்று சிரியா அரசு தனது பதில் கண்டனத்தை தெரிவித்தது. ரஷ்யா, துருக்கி மற்றும் இரான் ஆகிய நாடுகள் ஏற்பாடு செய்துள்ள இந்த அமைதி பேச்சுவார்த்தையில்தான், முதல் முறையாக இரு தரப்பில் யாரும் வெளியேறாமல் போராளிகளின் தளபதிகளும், சிரியா அரசாங்கத்தின் தூதுக்குழுவும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply