மலேசியாவில் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி
இந்தோனேசியாவை சேர்ந்த மக்கள் சிலர் வேலைக்காக அண்டை நாடான மலேசியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறிவருகின்றனர். இவர்கள் கடல் வழியாக கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்து மலேசிய எல்லைக்குள் நுழைகின்றனர். இது போன்ற பயணங்கள் சில நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்டோர் படகு ஒன்றில் மலேசியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து மூழ்கியது. இதில் 6 பெண்கள், 4 ஆண்கள் என 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மலேசியாவின் ஜோஹேர் மாகாணத்தில் மெர்சிங் கடற்கரையில் கரை ஒதுங்கின.
மேலும் சுமார் 30 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களது கதி என்ன? என்பது தெரியவில்லை. மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. 2 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சோர்வுகாரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிவந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply