அமெரிக்காவுக்கு வருகை தர மோதிக்கு டிரம்ப் அழைப்பு
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்கா வருமாறு அழைத்துள்ளார். இரு தலைவர்களுக்குமிடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலின் போது, இந்த அழைப்பை டிரம்ப் விடுத்தார்.உலகெங்கும் உள்ள சவால்களை சமாளிக்க இந்தியாவை ஒரு உண்மையான நண்பனாகவும், கூட்டாளியாகவும் டிரம்ப் கருதுவதாக அமெரிக்கா கூறியது.
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டுறவை பலப்படுத்தும் வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக அமெரிக்கா கூறியது.
தானும் டிரம்ப்பை இந்தியா வருமாறு அழைத்ததாக மோதி கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply