இந்திய குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் அபுதாபி இளவரசர்
இந்தியத் தலைநகர் தில்லியில் இன்று (வியாழக்கிழமை)நடக்கும் நாட்டின் வருடாந்திர குடியரசு தின அணிவகுப்பில், தலைமை விருந்தினராக கலந்து கொள்ள அபுதாபியின் இளவரசர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. வளைகுடா நாடுகளுடன் பொதுவாக நெருக்கமான உறவுகளை பராமரிக்கும் தனது பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பழைய கட்டமைப்பை மேம்படுத்தும் பணிக்காக தான் ஏறக்குறைய 75 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.
நேற்று (புதன்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இளவரசர் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் இடையே நடந்த ஒரு கூட்டத்துக்கு பிறகு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட பல ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply