அரசியல் ரீதியான ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை : புலிகள்

“இலங்கையின் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அறிவிப்பு உலக நாடுகளுக்குச் செவிசாய்ப்பது போலவும், முற்றுகைக்குள் உள்ள தமிழர்க்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ளும் ஒர் அரசியல் நாடகம். இராணுவ  அரசியல் ரீதிகளில் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தமே தேவை,” என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.

மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம்கொண்டதாகவும் அமைய வேண்டும்.

அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply