வெலி அமுனவின் இல்லத்திற்கு கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டது :ஹெந்தாவிதாரண
சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.சி வெலியமுனவின் கொஹூவளை, பெப்பிலியான வீதியில் அமைந்துள்ள இல்லத்திற்கு 2008ம் ஆண்டு செப்டெம்பர் 27ம் திகதி நள்ளிரவில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டிருப்பது , முன்னர் இராணுவப் புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரால் கபில ஹெந்தாவிதாரனவின் உத்தரவு மற்றும் வழிகாட்டலின் கீழ் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.
இக்கைக்குண்டு வெடிக்காததினால் வெலிஅமுன, பாரியார், பிள்ளைகள் இருவரும் தாக்குதலிலிருந்து தப்பியுள்ளர். இது தொடர்பிலான வழக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ‘ஊ’ இலக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் ‘ஊ’ என்ற இலக்கத்தில் வழக்கு தொடரப்படுவதற்கான காரணம் சந்தேகநபர்களை இனங்காணவில்லலை என்பதற்காகவே.
இருப்பினும் இச்சம்பவத்திற்கு மேஜர் ஜெனரால் ஹெந்தாவிதாரணவின் செயல்பாடு அடங்கியுள்ளதாக குறிப்பிட்ட இரகசிய பொலிஸ் விசாரனையின் போது தெரியவந்துள்ளது. இதனை உறுதிபடுத்திக் கொள்ள முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை வெகுவிரைவில் விசாரனை செய்யவதற்காக இரகசிய பொலிஸாரின் விசாரனைக்காக அழைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இவர்கள் இருவரின் கருத்துகளுக்கமைய கொஹூவளை பொலிஸார் மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப்படும்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply