கனடாவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு : 5 பேர் பலி

கனடாவில் கியூபெக் நகரில் இஸ்லாமிய கலாசார மையம் உள்ளது. அங்குள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகை நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்துக்குள் 3 மர்ம நபர்கள் புகுந்தனர். திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் தொழுகையில் பங்கேற்றவர்கள் மீது சரமாரியாக ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டனர். அதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உயிர்தப்பிக்க மக்கள் அங்கு மிங்கும் ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே துப்பாக்கி சூடு நடந்த கலாசார மையத்தை சுற்றி வளைத்த போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரை கைது செய்தனர். மேலும் கலாசார மையத்துக்குள் பதுங்கி இருக்கும் கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட மசூதிக்குள் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஆனால் 40 பேர் மட்டும் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூ டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply