ஈரான் ஏவுகணை சோதனை – தடையை மீறிய செயலா? விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது

ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்து பார்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் அந்த நாடு, நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை 29-ந் தேதி ஏவி சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து தெரிவிக்கையில், “ஈரான் நடத்தியுள்ள ஏவுகணை சோதனை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய நடவடிக்கையா என்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. ஐ.நா. தீர்மானத்தை மீறி நடவடிக்கைகள் எடுக்கிறபோது அல்லது தீர்மானத்துக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடுகிறபோது, ஈரான் அதற்கு பொறுப்பேற்க கூறி நடவடிக்கை எடுப்போம். மற்ற நாடுகளும் இதை செய்யும்” என கூறினார்.

 

அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவர் பாப் கார்கர், ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஈரான் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி விவாதிக்க வேண்டும் என்று இஸ்ரேல் தூதர் டேனி டேனான் வலியுறுத்தி உள்ளார்.

 

இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தி உள்ளதாகவும், அதன்பேரில் ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுவதாகவும் கடைசியாக வெளியான தகவல்கள் கூறுகின்றன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply