மஹிந்தவின் பிரஜாவுரிமையை நீக்குவது தொடர்பில் ராஜித கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையை நீக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க வில்லையென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவ்வாறானதொனரு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொய்யான பிரச்சாரம் பரவி வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் தாமதித்து வருவது தொடர்பில் பிரச்சினையுள்ளது. விசேடமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மிக் விமானம் கொள்வனவு, டுபாய் வங்கி வைப்புக்கள், ரகர் விளையாட்டு வீரர் கொலை உட்பட பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

 

சிறு பிரச்சினைகள் பற்றி மட்டும் விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடமுள்ளது.  சில அதிகாரிகள் முறையாக செயற்படாதுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எம்மாள் முடியாதுள்ளது. எது எவ்வாறிருப்பினும், விரைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply