தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா
அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தற்போது முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடித்தத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், தமது தலைமையில் செயல்படும் அமைச்சரவையை கலைத்து விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். அவரோடு சேர்த்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமா ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply