ஜெயலலிதாவின் கால்உட்பட எந்த உறுப்புகளும் அகற்றப்படவில்லை : மருத்துவர்கள் விளக்கம்
ஜெயலலிதாவின் கால்உட்பட எந்த உறுப்புகளும் அகற்றப்படவில்லை – மருத்துவர்கள் விளக்கம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துவந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது, மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தெரிவித்து உள்ளார்.
ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்களின் அஞ்சலியின் போது உடல் கெட்டக்கூடாது என்பதால் பதப்படுத்தப்பட்டது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும் எம்பால்மிங் செய்யப்பட்டது என்றார் டாக்டர் சுதா.
ஜெயலலிதாவின் கால் அகற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் கால்உட்பட எந்த உறுப்புகளும் அகற்றப்படவில்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்படவில்லை என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply