ஆட்சி அமைப்பதில் தமிழக கவர்னர் முன் உதாரணத்தை பின்பற்றவேண்டும்: ப.சிதம்பரம்

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க கவர்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிச்சயமாக ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கான ஒரு நபர் உரிமை கோரும் பட்சத்தில், அந்த நபர் தனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை நிரூபித்தால், ஆட்சி அமைக்கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. அதேநேரம் ஆட்சி அமைப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உரிமை கோரும் பட்சத்தில் உத்தரபிரதேச மாநில சட்டசபையில் என்ன நடந்ததோ, அதுபோல ஒரு வாக்கெடுப்பை கவர்னர் தமிழகத்தில் நடத்தவேண்டும். இதில் பழைய முன்உதாரணத்தை கவர்னர் பின்பற்றவேண்டும். இந்த தீர்ப்பு தொடர்பாக நான் கருத்து கூறவே விரும்பவில்லை. ஏனென்றால், இது சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு. இந்த தீர்ப்பை நாம் அனைவரும் நிச்சயம் மதித்துத் தான் ஆகவேண்டும்.

இவ்வாறு அதில் ப.சிதம்பரம் கூறி உள்ளார். 1998-ம் ஆண்டு முதல்-மந்திரி பதவிக்கு ஜக்தாம்பிகா பால் மற்றும் கல்யாண் சிங் இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டு வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது, நினைவு கூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply