அகதிகள் தாய்நாடு திரும்ப வேண்டும்:ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் போது அதிக அளவிலான தமிழர்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். சில நாடுகள் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி விட்டாலும், பல நாடுகள் இன்னும் அவர்களை அகதிகளாகத்தான் வைத்துள்ளன.
இந்நிலையில், அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர். அப்போது இலங்கை-ஆஸ்திரேலியா இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சந்திப்பின் போது பேசிய ரணில் விக்கிரம சிங்க, “சட்டத்தை மீறி இலங்கையிலிருந்து அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு பலர் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தாய்நாட்டுக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. அவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இலங்கையில் இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு” என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply