சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்யதுள்ளனர். ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.

ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் எட்டு புதிய டைனோசர் இனங்கள், படிமங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஷெய்ஜங் பகுதியில் அதிக டைனோசர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஷெய்ஜங் அருங்காட்சியகத்தின் துணை பொறுப்பாளர் ஜின் சிங்ஷெங் தெரிவித்துள்ளார்.

புதிய கண்டெடுப்புகள் பல்வேறு வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்கள் பேரழிவில் அழிந்திருப்பதை தெரியப்படுத்தியுள்ளது. சிறுகோள் மோதியதால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் மூலம் எரிமலை சீற்றம் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கலாம். இதனாலேயே டைனோசர்கள் அழிந்து போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply