லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி
ஐரோப்பாவுக்கு படகில் தப்ப முயன்ற 74 அகதிகள் லிபியா அருகே கடலில் மூழ்கி இறந்தனர்.ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் அந்த நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் சென்று அங்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.
இவ்வாறு படகில் செல்லும் போது அவ்வப்போது கடலில் மூழ்கி அவர்கள் பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். லிபியா மக்கள் அகதிகளாக செல்வதை தடுக்க அந்த நாட்டு கடலோர காவல் படை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஒரு படகில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்றனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது.
பின்னர் அந்த படகு லிபியா நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. அந்த படகுடன், 74 பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினரும், செஞ்சிலுவை சங்கத்தினரும் அங்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply