புகைப்படம் வெளியிட வேண்டாம் எனறு ஜெயலலிதா கேட்டு கொண்டார் அப்பல்லோ பதில் மனு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து, பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் நிலவுவதால் இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன். மிகப் பெரிய தலைவரான ஜெயலலிதாவின் சாவிலும் மர்மம் உள்ளது. இதுகுறித்து, விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவர ஆவணங்களை இந்த ஐகோர்ட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.
இந்த் மனு மீதான விசாரணையின் போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் ஜெயலலிதா புகைப்படம் வெளியிட வேண்டாம் எனறு ஜெயலலிதா கேட்டு கொண்டார். எஸ்பிஐ விதிப்படி நோயாளிகள் விவரங்களை வெளியிட வில்லை. என கூறி உள்ளது.அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அப்ப்ல்லோ நிர்வாகம் கூறி இருந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த மனு மீதான விசாரணையில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. மேலும் விசாரணையை அடுத்தமாதம் 13 ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply