ஜனாதிபதி தக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் : மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பை நடத்தி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.மேலும், அவைக்காவலர்களால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர் வித்யாசாகரை சந்தித்தும் ஸ்டாலின் முறையிட்டார்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விதிமீறல்கள் நடந்திருப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை இன்று சந்தித்து புகார் அளித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் குறியதாவது:-

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியினருக்கு சாதகமாக சபாநாயகர் நடந்து கொண்டார். இந்தியாவில் பல மாநிங்களில் சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்துள்ள முன் உதாரணங்கள் உள்ளது அதை ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது. ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

காலியான மைதானத்தில் தனியாக விளையாடி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றிபெற்றுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆரம்பம் முதலே திமுக உரிய விசாரணை கேட்டு வருகிறது. அவரது மரணத்தில் உள்ள ரகசியங்கள் தற்போதுதான் வெளிவர ஆரம்பித்துள்ளது. சட்டவிரோதமான அரசு அமைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற மு.க.ஸ்டாலின் உடன் துரை முருகன் மற்றும் மூத்த தலைவர்கள் சென்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply