விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்: தொண்டர்கள் மத்தியில் தீபா ஆவேச பேச்சு

தீபா இன்று காலை தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 10.45 மணிக்கு தி.நகரில் உள்ள தன் வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்ததும் வீட்டின் பால்கனிக்கு சென்று தீபா, தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணங்கினார்.இரட்டை விரல்களை காட்டியும் மகிழ்ச்சி தெரிவித்தார். பிறகு தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

அம்மாவின் நல்லாசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவரது நல்லாசியைப் பெற்று இன்று முதல் தீவிர அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.

நமது உரிமைகளையும், உடமைகளையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இன்று அதிகாரப்பூர்வமாக நமது அரசியல் அமைப்பு வெளியிடப்படுகிறது.

‘‘மக்களால் நான், மக்களுக்காக நான்’’ என்ற பாதையில் அம்மாவின் வழியைப் பின் தொடர்ந்து நமது லட்சியப் பாதையை வகுத்து வெற்றி பெறுவோம்.

எல்லாரது கபட நாடகமும் விரைவில் அம்பலத்துக்கு வரும். மக்களின் நலன் கருதி, மக்களுக்காக பணியாற்றுபவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இன்று முதல் நமது பயணம் தொடங்கி விட்டது. நமது லட்சிய பயணத்தில் உறுதியாக இருப்போம் என்று நம்புகிறேன்.

(இவ்வாறு அவர் கூறியதும் கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், அம்மா நாங்கள் உறுதியுடன் இருப்போம் என்றனர்).

நாம் இன்று தொடங்கி இருக்கும் அமைப்பு மூலம் மக்கள் பணியாற்றி வெற்றி பெறுவோம். விரைவில் இரட்டை இலையை மீட்டு எடுப்பேன். தொடர்ந்து உங்களுக்காக பணியாற்றுவேன்.

இவ்வாறு தீபா பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply