மேகதாது அணைக்கட்டு திட்டத்திற்கு அனுமதியளிக்க கூடாது : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசானது புதிய அணை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சமீபத்தில் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசின் இம்முயற்சியை தடுக்கும் விதமாக தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தமிழகத்தை பாதிக்க கூடிய கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட தொழில் நுட்ப அனுமதி அளிக்க கூடாது என்றும் எழுதியுள்ளார்.

தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது. ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெற மத்திய நீர்வள ஆணையத்தை அணுகவும் காவிரி விவகாரத்தில் இரு மாநிலம் சார்பாகவும்

கர்நாடகா திட்டமிட்டுள்ளது. பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த நிலையில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா முயற்சிப்பது தன்னிச்சையானது என தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பாயும் சக மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் கர்நாடகா முயற்சி செய்து வருகிறது என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 27-ம் தேதி பிரதமர் மோடியை தமிழக முதல்வர் நேரில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply